Sri Sethunarayana Perumal Seva Samidhi Trust, Watrap, Virudhunagar
  Contact : 04563 288073,  99408 03638     
Home கோவில் ஸ்தல வரலாறு Trustees Photos Videos Donate Us Contact Us

Plan to Construct

++ Read More

God Perumal++ See All

பொதுச் சேவை
++ Read More

பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள்

 

"நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்" என்னும் படியான திசைவிளக்காய் நிற்கும் திருவரங்கன், தானே மோஹித்து ஸ்ரீவில்லிபுத்தூர் எழுந்தருளி ஸ்ரீ நாச்சியாரை திருமணம் புரிந்து நித்யவாஸம் செய்யும் அந்த க்ஷேத்திரத்தின் வட்டாரச் சாயையில் அமைந்த க்ஷேத்திரம் வத்திரா இருப்பு க்ஷேத்திரம். இதை அர்சுனபுரீ என்றும் கூறுவர். இங்குள்ள நதிக்கு அர்சுன நதி என்று பெயர். அர்ச்சுனனால் ஏற்படுத்தப்பட்டது.

 

இங்கு எழுந்தருளியுள்ளப் பெருமாள் "ஸ்ரீ சேது நாராயணப் பெருமாள்" மிகவும் வரப்ரஸாதியாய், கேட்டவர்க்கு கேட்டப்படி வரம் அருளும் பெருமாள், வத்திரா இருப்பு நடு அக்ரஹாரத்தில் ஊருக்கு மத்தியில் எல்லோர்க்கும் அருள்பாலிக்கும் அபார கருணாமூர்த்தியாய் எழுந்தருளியுள்ளார். கோயில் பெருமாளே நமக்குக் கதி என்று எல்லா ஹரிதாஸர்களாலும், ஆழ்வார்கள், ஆசாரியர்களாலும் ஏகமுகமாய் காண்பிக்கப்பட்டு நாம் சென்று கைங்கர்யம் செய்யும் படியாய் எழுந்தருளியுள்ளார்.


பெருமாளின் கிருபையை முன்னிட்டு, கோயில் உற்சவாதிகளில் முக்கியமாக பிரம்மோத்ஸவத்திற்குத் தேவையான வாஹனங்களைப் புதுப்பித்து ஆண்டுதோறும் பிரம்மோத்ஸவத்தைச் சிறப்பாக நடத்தி வரவும், இதுபோல் வஸந்த உற்சவம், வருஷாபிஷேகம், தேதி பவித்ரோத்ஸவம், உரியடித்திருநாள், முக்கிய ஆழ்வாராதிகள் திருநக்ஷத்திரம் போன்ற முக்கிய திருவிழாக்களை அவ்வப்போது நடத்திவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களிடையே ஆன்மீக உணர்வைத் தூண்டும் வகையில் ஆண்டுதோறும் சத்சங்கங்கள், மார்கழி மாதம் திருப்பாவை உற்சவம், வேத, ஆகமங்கள், நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கற்றுக்கொடுத்தல் போன்ற நற்செயல்கள் புரிந்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


மேற்குறிப்பிட்ட பெருமாள் கைங்கர்யங்களை முடிந்தவரை சிறப்புடன் நடத்திவர இந்த டிரஸ்ட் பேராவா கொண்டுள்ளது. இக்கிராம மற்றும் நாட்டு நலன் கருதி செய்ய உத்தேசித்துள்ள இத்தெய்வீகத் தொண்டிற்க்கு ஆன்மீக உள்ளங்கள் கொண்ட பக்தர்கள் ஆக்கமும், ஊக்கமும் அளித்து, நன்கொடைகள் அளித்தும், அல்லது தனித்தனியாக உபயங்கள் கொடுத்தும் இந்த டிரஸ்டிற்க்குத் தங்கள் பேராதரவை நல்கி, பெருமாளின் கிருபைக்குப் பாத்திரர்களாகும்படி அன்புடன் வேண்டபடுகின்றார்கள்.

 

Earnest Request to Devotees

 

Watrap ( Vathirairuppu) a small fertile village is situated in Srivilliputtur Taluk, Virudhunagar District. In the heart of this village Sri Bhoo Devi, Sri Neela Devi Samedha Sri Sethu Narayana Perumal Temple is situated. This temple is an ancient one. It was erected and constructed by the elderly devotees of this village. This temple consists with a beautiful sanctum sanctorium (Moolasthanam) where the Moolavar Sri Sethunarayana Perumal with two Devees adorns and showering His divine blessings to all devotees coming to the temple. Besides this there are beautiful Uthsavo Moorthees, Separate sannidhi for Garudaivar and Suddarsana alwar. Moreover there are Dwajasthamban and several vahanams for the conduct of Brahmosthavam and other important festivals.


Even though there are such facilities in the temple, the said festivals cannot be celebrated without the requisite financial assistance. The good hearted devotees of this village have a long thurst to conduct important festivals in this temple. They believe the conduct of festivals will satisfy the Lord and thus get more of His blessings, not only to the village but also the entire world.


In order to conduct Brahmosthavam and other important festivals like Thiruppavai Vizha, Pavithrosthavam etc., and also to maintain the repaire works needed then and there, to conduct Sathsangams, to teach Dhivya Prabandam etc., in this temple, the public devotees decided to start a Seva Samidhi Trust. It is evident that a single man cannot do all the above works. With this noble task in mind the Seva Samidhi Trust was started on 09-07-2003 with one Sri.R.Ramsamy Iyengar as its founder and 15 other life trustees. To start with, all the 16 trustees have graciously donated a reasonable amount as their part and the trust was registered on 23-07-2003.
As mentioned above, the said Seva Samidhi Trust decided to collect funds and start the works as early as possible. So, the trust earnestly request all the devotees to donate their mites and also to give Upayams and thus help the trust to fulfill the Divine task and thus to get the Lord’s Blessings.


Copyright © 2014 Sri Sethunarayana Perumal Seva Samidhi Trust go4property.com by