Sri Sethunarayana Perumal Seva Samidhi Trust, Watrap, Virudhunagar
  Contact : 04563 288073,  99408 03638     
Home கோவில் ஸ்தல வரலாறு Trustees Photos Videos Donate Us Contact Us

Plan to Construct

++ Read More

God Perumal







++ See All

பொதுச் சேவை
++ Read More

Temple History

புராண காலத்தில் தர்மாரண்ய சேஷத்திரம் என்ற புண்ணியத்தலமாகப் புகழ்பெற்றதும், அர்ஜுனனின் தீர்த்த யாத்திரைச் சமயத்தில் விஜயம் செய்யப் பெற்றதும், அக்காலத்தில் அப்பகுதியில் வறட்சி நிலவவே, அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜூனனால் அம்பு எய்தப் பெற்று, அர்ஜூனன் பொய்கை என்ற இடத்தில் இருந்து உற்பத்தியாகும் "அர்ஜூனாநதி" என்ற நதிக்கரையில் அமையப் பெற்றதுமான பெருமைகளுடையது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரி வட்டம், வத்திராயிருப்பு கிராமம் ஆகும்.


ஸ்ரீ மஹாலெக்க்ஷ்மி தாயார் எம்பெருமான் ஸ்ரீமத் நாராயணனைத் தனது இதய கமலத்தில் வைத்து ஏகாந்த மாக தவம் செய்யத்திருவுள்ளம் கொண்டு அதற்கு ஏற்பப் புனிதமான இடம் எது? என்று சப்தரிஷிகளிடம் கேட்க அவர்களும் இத்திருத்தலத்தைக் காட்டியருளினர். இதனை ஸ்ரீதேவித்தாயாரும் திருமுகம் மலர்ந்து ஏற்றதால் இத்திருத்தலத்திற்கு ஸ்ரீ (மகாலஷ்மி) வக்தரம் (திருமு்கம்மலர்தல்) அதாவது "ஸ்ரீ வக்தரபுரம்" என்ற தெய்வீகப் பெயர் ஏற்பட்டது. அதுவே மருவித்தற்போது வத்திராயிருப்பு என அமைந்து விட்டது.

 

1. பிரம்மோத்ஸவம்:
கடந்த 10 ஆண்டுகளாகப்பக்தர்களின் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேற்படி பிரம்மோத்ஸவத்தின் உத்தேச பட்ஜெட் தரப்பட்டுள்ளது. வருடா வருடம் ஜுலை மாதம் இவ்வுற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

1. அன்னதானம், தளிகை பலசரக்கு, தளிகைகூலி ரூ. 1,75,000
2. வேத பாராயணகோஷ்டியர்களுக்கு ரூ. 30,000
3. பட்டாச்சாரியர்கள் சம்பாவனை ரூ. 30,000
4. புஷ்பம் 8 நாட்கள் மற்றும் புஷ்பாஞ்சலி ரூ. 25,000
5. மங்கள இசை 8 நாட்களுக்கு ரூ. 25,000
6. வீடியோ போட்டோக்கள் ரூ. 20,000
7. சத் சங்கங்கள் ரூ. 20,000
8. பெருமாள் வஸ்திரங்கள் ரூ. 15,000
9. வாகன ரிப்பேர் ரூ. 15,000
10. மேலக்கோவில் பெருமாள் திருமஞ்சன செலவு ரூ. 10,000
11. லேமினேசன் ரூ. 10,000
12. பத்திரிக்கை, ரசீது புத்தகங்கள் ரூ. 10,000
13. திருமஞ்சன திரவியங்கள் ரூ. 10,000
14. பந்தலுக்கு மின் விளக்குகள் ஜெனரேட்டர் உள்பட ரூ. 10,000
15. உள்ளுர் பட்டாச் சாரியார் சம்பாவனை ரூ. 10,000
17. பந்தல் ரூ. 10,000
18. பெருமாள் வீதிபுறப்பாட்டு செலவு ரூ. 5,000
18. கெருடக் கொடி ரூ. 5,000
உத்தேச மொத்த செலவு ரூ. 4,57,000

3. ஓவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் கட்டளைதாரர் மூலம் 'பவித்ரோச்சவம்' சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாக மேற்படி உத்ஸவம் நடைபெறாமல் நின்று விட்டது. தற்போது இந்த ஆண்டு முதல் அன்பர்களின் ஆதரவோடும், நமது டிரஸ்டின் சார்பிலும் மேற்படி உற்சவம் முன்று நாட்கள் விமரிசையாக நடைபெறவுள்ளது.
குறிப்பு:
பவித்ரோர்ச்சவம் நடைபெறும் நாட்களில் பக்தர்கள் மேற்படி உத்ஸவத்தில் கலந்து கொண்டு எம்பெருமானைச் சேவித்தால் 360 நாட்களும் இந்த வத்திராயிருப்பு ஷேத்திரத்திலேயே தங்கிப் பெருமானை சேவித்த பலனும், தர்ம, அர்த்த, காம, மோக்ஷ, பல புருக்ஷர்த்தங்களும் கிட்டும். இந்த பவித்ரோர்சவம் மூன்று நாட்கள் நடைபெற எல்லாச் செலவுகளும் சேர்த்து சுமார் ஒண்ணரை இலட்சங்கள் ஆகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. அன்பர்களின் ஆதரவோடு இந்த ஆண்டு முதல் நடைபெறுவதற்குப் பகவானை பிரார்த்தனை செய்கிறோம்.

 

5. வாஹனப் பிறை:
திருக்கோவிலில் உள்ள வாகனங்களை வைப்பதற்கு ஏற்கனவே உள்ளது போகப் பாதுகாப்பாக வைப்பதற்கும் புதிய வாகனப்பிறை அமைக்க (ஆசாரி கூலி, தகரம் ஷெட், சுவர்கட்டுதல், கதவுகள் போட) எதிர்பார்க்கும் உத்தேசச் செலவு ரூபாய் ஒரு இலட்சம் ஆகும். இதை அமைப்பதற்கு அன்பர்கள் தாராளமாய்ப் பொருள் உதவி செய்யவேணுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

 

6. நம்முடைய திருக்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சேதுநாராயணப் பெருமாளுக்கு
மேலும் ரூபாய் ஆயிரம் ஸ்ரீ சேதுநாராயணப் பெருமாள் சேவாசமிதி டிரஸ்டிற்க்கு அனுப்பினால் அத்தொகை டிரஸ்ட் சார்பில் டெபாசிட் செய்யப்படும்.அதன் வருட வட்டித்தொகையில் ரூபாய் ஆயிரம் அளிக்கும் நபர் குறிப்பிடும் நாளில் (ஜண்மநட்சத்திரம், பிறந்தநாள்) ஸ்ரீ சேதுநாரயணப் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்ப்பபடும்.

எனவே, அன்பர்கள் ரூ 1000/- டிரஸ்டிற்க்கு நிரந்தர இட்டுவைப்புக்கு செய்ய அனுப்பி (ஜன்மநட்சத்திரம், பிறந்தநாள் உள்பட) வருடம் தோறும் பெருமாளுக்கு அர்ச்சனை நடக்கச் செய்து பிரசாதம் பெற்று பெருமாளின் அருள் குடும்பத்திற்கு பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.

7. ஸ்ரீ ஸ்ரீ மாதிரி ரமணா ஸ்ரீராம நாம வங்கி

நமது டிரஸ்டின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வத்திராயிருப்பில் உள்ள ராமபக்தரிகளிடம் ராமநாமா சீட்டுகளைக் கொடுத்து (1 ஷீட் 1008 நாமங்களைக் கொண்டது) ஏறத்தாழ நாலரைக்கோடி ராமநாம சீட்டுகளைக்கெட்டுப் போகாமல் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறோம். மேலும் அதற்குப் பூஜையும் செய்து வருகிறோம். மேற்படி நற்காரியம் ஊர் நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் திருக்கோவிலின் ஈடுபாடுள்ள அன்பர்களுக்காகவும் நல்லமுறையில் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10 கோடி ராமநாம சீட்டுக்களைப்பிரதிஷ்டை செய்ய உள்ளோம். ஒரு ரீம் ராமநாமாச் சீட்டுக்கள் அடிக்க ரூபாய் 500/- செலவாகிறது. அன்பர்கள் இந்த நல்ல காரியத்திற்கு உதவி செய்ய வேணுமாய்ப் பிரார்த்தனை செய்கிறோம்.

 

8. ஸ்த்ஸங்கம்:
நம் டிரஸ்ட் மூலமாக ஊர் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் மேலும் பக்தர்களின் நன்மைக்காகவும் வருடம் தோறும் ஸ்ரீமத் இராமாயணம் ஒன்பது நாட்களும், ஸ்ரீமத்பாகவதம் எட்டு நாட்களும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதற்கு ராமாயணம், ஸ்ரீமத்பாகவதம் சம்பாவணை மற்றும் இதரச்செலவு ஆகியவற்றிற்கு குறைந்த பட்சம் ரூபாய் பத்தாயிரம் செலவாகிறது. மேற்படி காரியங்களுக்கு அன்பர்கள் தாராளமாய் உதவி புரிந்திட வேணுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

 

9. உலக க்ஷேமத்திற்கும், ஊர் க்ஷேமத்திற்கும் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தினந்தோறும் காலை 5 மணி முதல் 6 மணி முடிய ராமநாமா நகர ஸங்கீர்த்தனம் (ஹரேராமா, ஹரே கிருஷ்ணா) சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

 

10. நம் கோவிலின் முகப்புப் போட்டோ, கோபுரம் போட்டோ, 10 ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ வாகனப் புறப்பாடு படங்கள் மற்றும் உத்ஸவ நிகழ்ச்சிகள் அன்னதான படங்கள் போட வேணும்.

 

11. திருப்பாவை விழா:
கடந்த 11 ஆண்டுகளாக டிரஸ்ட் சார்பில் திருப்பாவைவிழா நடைபெற்று வருகிறது.திருப்பாவைப் பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டும் பரிசுள் வழங்கப்படுகிறது. பரிசுகள் மற்றும் விழாச் செலவுகள் உட்பட மொத்தல் ரூபாய் ஆறாயிரம் செலவாகிறது. இதற்கும் நன்கொடை வேண்டுகிறோம்.


Copyright © 2014 Sri Sethunarayana Perumal Seva Samidhi Trust go4property.com by